
பொதுத்துறையை சேர்ந்த ஐஓபி என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் கேஸ் ஏஜென்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். சிலிண்டரை விரைந்து விநியோகிக்க இந்திய ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் இனி ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தின் அனைத்து நாட்களும் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.