உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் மூலமாக இனி மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முக்கிய நேரத்தில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு வழங்க வேண்டும் என்றால் கேலரியில் தேட வேண்டிய அவசியம் இல்லை.

வாட்ஸ் அப் மூலமாக உங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முதலில் மெட்ரோ டிக்கெட்டுகளை பெறுவதற்கு +919650855800  என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக மெட்ரோ டிக்கெட்டுகளை பெறலாம். அதனைப் போலவே தற்போது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு +919013151515 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணுக்கு hi என்று எஸ்எம்எஸ் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டால் உங்களுக்கு தேவையான ஆவணங்கள் pdf வடிவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது