இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ சேவையை பயன்படுத்தி வரும் நிலையில் பல பிரச்சனைகளை நாள்தோறும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் இனி பணம் செலுத்தலாம் என்ற புதிய சேவையை அமேசான் பே அறிமுகம் செய்துள்ளது. கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தும் புதிய முறையை அமேசான் பே தற்போது கொண்டு வந்துள்ளது. அமேசான் RBL வங்கியுடன் கூட்டு சேர்ந்து இந்த செயல்முறையை தொடங்கியுள்ள நிலையில் ஒரு வாடிக்கையாளர் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் எளிதாக யுபிஐ கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.

இருந்தாலும் சில தளங்கள் கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூல் செய்கின்றன. அமேசான் பே கிரெடிட் கார்டின் உதவியுடன் யுபிஐ பணம் செலுத்துவதில் ஏதாவது சிக்கலை எதிர்கொள்வீர்களா இல்லையா என்பது பற்றி வரும் நாட்களில் தான் தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.