ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஹரியானா அரசாங்கம் ரேஷன் பொருட்களுடன் பணத்தையும் தருகிறது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் 250 ரூபாய் வழங்குவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்தது. தற்போது இந்த தொகையை 300 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசின் இந்த மாற்று பலனை பி.பி.எல் மற்றும் AAY கார்டுதாரர்கள் பெறுவார்கள். இதன் மூலம் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.