
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வயதில் மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலம் பாதித்தவர்கள் நியாய விலை கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக வேறு யாராவது நியாய விலை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் https://www.tnpds.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குள் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதள பதிவில் மூத்த குடிமக்களின் சார்பில் நியாய விலை கடைகளுக்கு செல்லும் நபரின் பெயர், உறவுமுறை மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்