நாடு முழுவதும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய விவசாய குடும்பங்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை மூன்று தவணையாக 2000 விதம் ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் உதவித்தொகை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் உதவித்தொகை வழங்க மத்திய அரசு பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திட்ட விவசாயிகளுக்கு 6000க்கு பதிலாக 8,000 வழங்க இருப்பதாகவும் ஒரு வருடத்தில் மூன்று தவணைகளாக உதவி தொகை வழங்காமல் நான்கு தவணைகளாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வரையில் 15 தவணைக்கான பணத்தை விவசாயிகள் பெற்றிருக்கும் நிலையில் 16 வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச்  மாதத்தில் 16 ஆவது தவணைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று  தகவல் வெளியாகியுள்ளது.