இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது டிக்கெட் முன்பதிவு போன்ற நடைமுறைகள் பயணிகள் அணுகும் விதமாக மிக எளிதாகி வரும் நிலையில் நாட்டில் சுமார் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையங்களை போலவே ரயில் நிலையங்களிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டது ரயில்கள் குறித்த விவரங்களை திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே ஒலிபெருக்கி மூலமாக ரயில்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் மற்றும் பிளாட்பாரம் எண் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்படும். ஆனால் தற்போது இந்த முறை மாற்றப்பட்ட இனி ரயில் நிலையங்களில் பயணிகள் அறியும் படி விவரங்களை டிஜிட்டல் திரையில் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதலில் சென்னை டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதில் பயணிகளின் வசதிக்காக தமிழ், ஆங்கிலம் மற்றும் கிண்டி உள்ளிட்ட மொழிகளில் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் விவரங்கள் அனைத்தும் திரையிடப்படும்.