மாநிலங்களுக்கு இனி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் அதிக முன்னுரிமை வழங்கப்படும். இந்த சிறப்பு அந்தஸ்து புவியியல் ரீதியாகவும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கு வாய்ப்பு குறைந்த மாநிலங்களுக்கு கொடுக்கப்படும். இந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு அந்தஸ்து பட்டியலில் அசாம், நாகலாந்து, ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், திரிபுரா, உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்கள் இருக்கிறது. இந்நிலையில் ஒடிசா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனி சிறப்பு அந்தஸ்து எந்த மாநிலங்களுக்கும் வழங்கப்படாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கு இனி மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது தற்போது மாநிலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.