பொதுவாக youtube இல் நம்முடைய குரலை வைத்து அதில் வரும் சொற்களை பெற்றுக்கொண்டு அது சம்பந்தமான தகவல்களை கூகுள் தேடி கொடுக்கும். இந்த டெக்னாலஜி கடந்த 2020 வருடத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் அதேபோன்ற ஒரு டெக்னாலஜி youtube நிறுவனமும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஒரு பாடலின் இசையை முணுமுணுத்தாலோ அல்லது ஏதாவது ஒரு வரியை பாடினாலோ அந்த கட்டளையை பெற்றுக்கொண்டு ஒரு சில முடிவுகளில் அதற்கு ஏற்றார் போல முடிவுகளை நமக்கு காட்டும்.

தற்போது இந்த டெக்னாலஜி யூடியூபில் அறிமுகம் படுத்தும் சோதனையில் இந்த நிறுவனம் இறங்கி உள்ளதாக யூ டியூப் அறிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் குறைந்தபட்சம் முடிவுகள் காட்ட 15 நொடிகள் எடுத்துக் கொண்டால் அதே டெக்னாலஜி மூன்று நொடிகளில் யூடியூப்பில் காட்டும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது youtube வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்த்தும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே இனிமேல் மறந்து போன பாடல்களை யோசித்து புலம்ப வேண்டாம். வாயில் டியுன் போட்டே பாடலை கண்டுபிடித்து விடலாம்.