இன்றைய காலகட்டத்தில் சிறியவர்களின் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஒரு புறம் நல்லது இருந்தாலும் மறுபுறம் கெடுதலும் இருக்கிறது. அதாவது பல இடங்களில் செல்போன் வெடித்து உயிர் போன சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்ஃபோன்களை தலையணை மீதோ, மெத்தை மீதோ, துணிமணிகள் மீதோ வைத்து சார்ஜ் போட வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

செல்ஃபோன்களை சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பம் உருவாகும் என்பதால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் திறந்தவெளியில் டேபிள் அல்லது தரை மீது வைத்து மட்டுமே ஃபோன்களை சார்ஜ் செய்யவும். இரவில் ஃபோனை அருகில் வைத்து தூங்குவதையும் தவிர்க்கவும்.