தமிழகத்தில் மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் கணக்கில் இரண்டு மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் மூன்று மடங்கு தொகையை முன்வைப்பு தொகையை வைத்திருக்க வேண்டும். இந்த இருப்பு தொகையை வைத்திருக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

போதிய வைப்புத் தொகை இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பிய 30 நாட்களுக்குப் பிறகும் வைப்புத் தொகையை செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வைப்புத் தொகை குறித்த விவரங்களை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். உரிய காலத்தில் வயிற்று தொகையை செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.