புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது.

அதையும் மீறி ரூ.2000 நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக்  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும். அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.