நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் இருந்து 250 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.