உணவுப் பொருட்களை பார்சலில் விற்பனை செய்யும்போது அதற்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி ஆணையத்திற்கு எதிராக ஹல்திராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உணவு பார்சல் வழங்குவதை பொருள் விற்பனையாக மட்டுமே கருத வேண்டும் எனவும் அதை ஒரு சேவையாக கருதக்கூடாது எனவும் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே பார்சல் சேவைக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது.

உணவகங்களுக்கு சேவை வரியை கடந்த 2011ம் வருடம் பிப்ரவரி மாதம் நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2015 ஆகஸ்ட் 13ம் தேதி, உணவு பார்சல் மற்றும் ஹோம் டெலிவரி சேவைகளுக்கு சேவை வரி கடையாது என நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியதை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது.