அதிமுக உடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து பேசிய வைகை செல்வன், கசப்பான அனுபவங்களால் பாஜகவை கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம். இனி பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.