
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இனி பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு உடை அணிய தேவை கிடையாது.
அதாவது பட்டமளிப்பு விழாவின் போது போடப்படும் கருப்பு நிற உடை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது கருப்பு உடை அணிய வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இனி பட்டமளிப்பு விழாவின் போது அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தார் போன்று பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது