
தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள் இருப்பதில்லை, முறையான கழிப்பிட வசதிகளும் இருப்பதில்லை பராமரிப்பு வசதி இல்லை என்று பயணிகள் இடமிருந்து புகார்கள் வருகிறது.
இதையடுத்து தற்போது உணவகங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் தெளிவாக இல்லாததால், இனி, என்ன குறை என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.