
பயனர்களின் ஆங்கிலத்தில் பேசும் திறனை மேம்படுத்துவதற்காக கூகுள் நிறுவனம் Speaking practice என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. AI தொழில்நுட்ப உதவியுடன் இது நமக்கு ஒரு கற்றல் பயிற்சியாக இருக்கும். இதன் மூலமாக அன்றாட சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய புதிய வார்த்தைகளை நாம் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்.
Google speaking practice தற்போது இந்தியா, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் Google lab’s இல் speaking practice என்ற வசதி இருக்கும். கூகுளின் இந்த பயிற்சி பயனரிடம் கேள்வி கேட்பதன் மூலம் தொடங்குகின்றது. குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பயனடைந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் பயனர்கள் ஆங்கிலம் சிறப்பாக பேசுவது தான்.