
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். இதேபோன்று தற்போது நிலத்திற்கு ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்படி தனித்தனியாக ஆதார் கார்டு இருக்கிறதோ அதேபோன்று அவர்களின் நிலத்திற்கு ஆதார் கார்டு என்பது தனியாக இருக்கும்.
இந்த புதிய திட்டமானது அடுத்து வரும் 3 வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது பூ ஆதார் கார்டு என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு 14 இலக்க எண் கொண்ட தனித்துவ ஆதார் வழங்கப்படும். அதோடு இதில் நிலத்தின் அடையாள எண், உரிமையாளரின் பெயர், அந்த நிலத்தின் படம் போன்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் எளிதாக வேளாண்மை கடன் பெற்று பயன்பெறலாம். இந்த ஆதார் கார்டை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நிலம் ஜியோ டேக் செய்து அதன்மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த பூ ஆதார் கார்டு நிச்சயம் ஒரு மாற்றத்தை நாட்டில் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.