இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ், ட்ரோன் மற்றும் ஜவுளி துறைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் ஐடி துறை சார்ந்த தேவைகள் அதிகரித்து வருவதால் உற்பத்தி பொருட்களை பெருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிஎல்ஐ திட்டத்தின் மூலம் ஐடி துறையினருக்கான உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் இந்த திட்டம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பாதையை அடையும். இதன் காரணமாக துவண்டு கிடந்த ஐடி துறைகளில் தற்போது புத்துயிர் பெற்று புதிய பாதையில் செல்லும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.