இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக அளவில் பனிமூட்டம் நிலவுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த கடுமையான குளிரின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.‌

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ஏற்கனவே அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 14-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 16-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.