பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு செய்துவிட்டால் முதலில் நல்ல வங்கியை தேர்வு செய்து வட்டி எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு அதை மற்ற வங்கிகளின் வட்டியோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வட்டியோடு சேர்த்து செயல்பாட்டு கட்டணமும் எவ்வளவு என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் சில வங்கிகளில் செயல்பாட்டு கட்டணம் இருக்காது. அதோடு நீங்கள் கடனை மாத மாதம் செலுத்தும் தவணை தொகை மற்றும் கடனை திரும்ப அழைக்கும் காலவரம்பு போன்றவைகள் உங்களுடைய சம்பளத்தில் அடங்குமா என்பதையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் தனி நபருக்கான கடன் மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ஹெச்டிஎஃப்சி வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதம் முதல் 21 சதவீதமாகவும், செயல்பாட்டு கட்டணம் 2.50 சதவீதமாகவும் இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியில் வட்டி விகிதம் 10.75 சதவீதம் முதல் 19 சதவீதமும், செயல்பாட்டு கட்டணம் 2.50 சதவீதமாகவும் இருக்கிறது. சிட்டி பேங்கில் வட்டி விகிதம் 10.50 சதவீதம் முதல் 16.49 சதவீதமாகவும் செயல்பாட்டு கட்டணம் 3 சதவீதமாகவும் இருக்கிறது. கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதம் 10.99 சதவீதமாகவும் செயல்பாட்டு கட்டணம் 3 சதவீதமும் இருக்கிறது. ஆக்சிஸ் வங்கியில் வட்டி 12 சதவீதம் முதல் 21 சதவீதமாகவும், செயல்பாட்டு கட்டணம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதமாகவும் இருக்கிறது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கில் 10.49 சதவீத வட்டியும், 3.5 சதவீதம் வரை செயல்பாட்டு கட்டணமும் இருக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 10.65 சதவீதம் முதல் 13.65 சதவீதம் வரை வட்டியும், 1.50 சதவீதம் வரை செயல்பாட்டு கட்டணம் இருக்கிறது. பேங்க் ஆப் பரோடாவில் வட்டி 10.50 சதவீதம் முதல் 12.50 சதவீதம் வரையும், செயல்பாட்டு கட்டணம் 2 சதவீதம் வரையும் இருக்கிறது. பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி 8.75 சதவீதம் முதல் 13.75% வரையும், செயல்பாட்டு கட்டணம் 1 சதவீதமாகவும் இருக்கிறது. ஐடிபிஐ வங்கியில் வட்டி 10.25 சதவீதம் முதல் 13 சதவீதம் வரையும், கரூர் வைசியா பேங்கில் வட்டி 9.95 சதவீதம் முதல் 12.95 சதவீதம் வரையும், செயல்பாட்டு கட்டணம் 0.30 சதவீதமாகவும் இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி 10.15 சதவீதமாகவும், செயல்பாட்டு கட்டணம் 1.00 சதவீதமாகவும் இருக்கிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 9.25 சதவீதம் முதல் வட்டியும், 1 சதவீதம் வரை செயல்பாட்டு கட்டணமும் இருக்கிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி 11.85%, செயல்பாட்டு கட்டணம் 1%, சிட்டி யூனியன் பேங்கில் 9.50 சதவீத வட்டியும், 1 % செயல்பாட்டு கட்டணமும் இருக்கிறது. மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பொருத்தவரை வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் வங்கி எடுக்கும் முடிவை பொருத்தது.