
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது 4-வது முறையாக அத்தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். இவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு என்னால் முடிந்த வரை மக்கள் பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன். அடுத்த 5 வருடங்களுக்கு என்னால் முடிந்தவரை எல்லா நலப் பணிகளையும் இத்தொகுதிக்கு செய்வேன். அதன் பிறகு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதற்காக இனி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். 5 வருடத்திற்கு பிறகோ 5 வருடத்திற்கு முன்பாகவோ தேர்தல் வந்தால் இனி போட்டியிட மாட்டேன். அரசியல் இல்லாமலேயே என்னுடைய மக்கள் நல பணிகளை தொடர்வேன் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சசிதரூர் கூறியது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.