மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தத்தெடுப்பு விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருமணமானவர்கள் தான் குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவர்கள் ஆகியோர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம். அதோடு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் அவர்கள் கூட குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம். இந்நிலையில் 35 வயது முதல் 60 வயது உடையவர்கள் வரை 6 வயது சிறுவர் சிறுமிகளை தத்தெடுக்கலாம். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை 2 வருட பராமரிப்புக்கு பின் தத்தெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.