தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வழக்கம் போல நடந்தது. ஆளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்ற நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியின் ஏற்பாடுகளுக்கு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது போட்டியின் போது மாடுபிடி வீரர் அல்லது பார்வையாளர் யாராவது உயிரிழந்தால் அல்லது காயமடைந்தால், நிரந்தர ஊனம் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு 5 லட்சம் வரை காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த காப்பீட்டு வழங்கப்படுவதை போட்டு ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் காப்பீடு வழங்கினால் மட்டுமே போட்டியை நடத்த அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.