பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று சிவாங்கி அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 சீசன்களில் கோமாளியாக கலக்கிய சிவாங்கி தற்போது குக்-ஆக அசத்தி வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர். ‘அடுத்த cwc நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிவாங்கி, இதுதான் என்னுடைய கடைசி cwc என்று பதிலளித்திருக்கிறார்.