இந்திய ரயில்வேயில் 2027ம் ஆண்டுக்குள் காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் தரப்பில் இருந்து வெளியான தகவலில், நாட்டில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800 கோடியில் இருந்து 1,000 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது புறநகர் ரயில்கள் உள்பட மொத்தம் 10,748 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி புதிதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்குவதற்காக, ஆண்டுக்கு 5,000 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் புக்கிங் செய்யும் அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.