
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய டெபிட் கார்டை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. பிரெய்லி முறையில் இந்த ஏடிஎம் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விரல்களால் தொட்டு உணரும் வகையில் உயர்த்தப்பட்ட புள்ளிகள் மற்றும் எழுத்துக்களுடன் ஏடிஎம் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்பின் எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டமான பிளவு ஏடிஎம் மையங்களில் கார்டை பயன்படுத்தும் போது அதன் திசையை அறிந்து கொள்ள உதவுகின்றது.