கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என்று அரசாணை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பல கிராமப்புறங்களில் வங்கி அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இது போன்ற அரசாணையை கொண்டு வருமா என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.