மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்மல் சந்திர ராய் 4, 309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 97, 613 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியின் தபசி ராய் 93, 304 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர்  ஈஸ்வர் சந்திர ராய் 13758 வாக்குகளும், பாரதிய நியாய்-அதிகார் ரக்ஷா கட்சியின் சாதனா சிங்கா ராய் 2171 வாக்குகளும், கமதாபூர் மக்கள் கட்சி (ஐக்கிய)யின் ரஞ்சித் பர்மன் 1,161 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட தேபாசிஷ் ராய் 994 வாக்குகளும்,

ஸ்வாபிமான் கட்சியின் வேட்பாளர் ரவீந்திர நாத் ராய் 714 வாக்குகளும் நோட்டா – 1220 வாக்குகளும் பெற்றன. மேற்குவங்கத்தை நீண்ட காலத்துக்கு ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 6.52 % வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவெறும் 2.05 % வாக்கு வித்தியாசத்தில் தங்களது தொகுதியை TMC-யிடம் பறிகொடுத்தது மம்தா பானர்ஜியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.