மேற்கு வங்கம் மாநிலத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய்
97,613 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தபசி ராய் 93304  வாக்குகளும் எடுத்தனர்.

இதன் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  4,309 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதி 2021இல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக வசம் இருந்த தொகுதி என்பது குறிப்பிட தக்கது.

இந்த வெற்றி குறித்து மேற்கு வாங்க மாநில முதல்வரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பனர்ஜி, ட்விட்டர் Xஇல் பதிவிட்டுள்ளார். அதில், துப்குரி சட்டமன்றத் தொகுதிக்கான முக்கியமான இடைத்தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு ஆதரவாக உறுதியாக வாக்களித்ததற்காக துப்புகுரி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கு வங்காளத்தில் உள்ள மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், மேலும் எங்களது வளர்ச்சி, யை மக்கள் நம்புகிறார்கள். வங்காளம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது, விரைவில் இந்தியாவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெய் வங்காளம்! ஜெய் இந்தியா! என பதிவிட்டுள்ளார்.