குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே செல்வது வழக்கம். பின்னர் அவர்களை கண்காணிப்பது சிக்கலாகவே உள்ளது. இதை  தவிர்ப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் போலீசார் புது வழியை பின்பற்றுகின்றனர். ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குலாம் முகமது பட் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதே நேரத்தில் அவருடைய நடவடிக்கைகளை கண்காணிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.  எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஜிபிஎஸ் வளையத்தை, சம்பந்தப்பட்ட நபர்களின் கணுக்காலில் பொருத்தி, அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கின்றனர்.