கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவது தேசிய மற்றும் மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர் கல்வியில் தரநிலைகள் உள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதி தேர்வு,மாநில தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதி தேர்வு போன்ற ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் உதவி பேராசிரியர் பணிக்கு பி எச் டி தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படாத இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.