அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க 12 மாத காலம் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுப்பு அளித்து வருகிறது. அதன் பிறகு உடல் நல கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவ சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஜார்கண்டில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்திற்கு அந்த மாநில முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒப்பந்த முறையில் பணியாற்றி பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் அரசு துறையில் 80 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.