நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் பெரும்பாலும் தபால் நிலைய திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய அரசு கொண்டுவந்துள்ள பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தை தபால் நிலையத்தில் தொடங்கலாம். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீடு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் ஒரு தபால் நிலைய கணக்கில் ஒரு நாளைக்கு ஆறு ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்து திட்டத்தின் பலன்களை பெற முடியும். குழந்தை பெயரில் தினமும் ஆறு ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 15 வயதிற்குள் துரதிஷ்டவசமாக குழந்தை உயிரிழந்தால் ஒரு லட்சம் காப்பீடு வழங்கப்படும். 20 வயதுக்கு பின்னர் வட்டியுடன் முதிர்வுத் தொகை இந்த திட்டத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது