மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு  செய்திருந்தால் அவர்கள் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் முழு சீட்டு கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் ரயிலில் ஏறுவதற்கான உரிமை வழங்குவதாக அர்த்தம்.

ரயிலில் ஏசி வகுப்புகளில் படுத்துக் கொண்டு பயணம் செய்வோருக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் RAC என்று சொல்லப்படும் உட்கார்ந்து பயணம் செய்வோருக்கு இப்படியான எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. அவர்களுக்கும் போர்வை வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ரயில்வே தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இனி RAC பயணிகளுக்கும் கம்பளிப் போர்வை வழங்கப்படவுள்ளது.