ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விசா தேவைப்படும். சில நாடுகளுக்கு செல்ல மிக எளிதாக விசா கிடைத்துவிடும். சில நாடுகளில் விசா கிடைப்பது கடுமையாக இருக்கும். இந்நிலையில் இலங்கை செல்ல இந்தியர்களுக்கு இனி விசா தேவை இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலமாக விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல முடியும். இந்தியா மட்டுமல்லாது இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, ரஷ்யா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல முடியும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டமானது அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.