இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு நிகழ்வுகளை அறியும் வகையில் வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

JCERT உடன் இணைந்து பள்ளிகள் செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை தினம் தோறும் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வினாடி வினா மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பான வினாக்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்படும். தினம்தோறும் பள்ளி இறை வணக்க கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற வேண்டும். செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.