தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலா பயணிகளாக வருவதுண்டு. அவ்வாறு வருபவர்களில் சில ஆண்களும் பெண்களும் அரைக்கால் சட்டை அடைந்தவாறு வருவதுண்டு.

இதனை தடுக்கும் விதமாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் வேஷ்டி, சட்டை, பேண்ட் அணிந்து தான் வர வேண்டும் என்றும் பெண்கள் துப்பட்டா உடன் கூடிய சுடிதார், புடவை, தாவணி போன்ற ஆடையில் தான் வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.