வங்கி விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு கூட்டுறவு  வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்பட்டு வந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்தது. இந்நிலையில் உ.பியை  சேர்ந்த யுனைடெட் கோவா ஆப்பரேட்டிவ் பேங்க் லிமிடெட் என்ற வங்கியின் உரிமத்தை ரத்த செய்தது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, இந்த வங்கியில் எந்தவிதமான டெபாசிட் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 19 முதல் எந்த ஒரு வங்கி வணிகத்தையும் செய்யக்கூடாது என்று அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல எந்த வகையான வைப்பு தொகையும் இந்த வங்கியில் இனி ஏற்க முடியாது. இந்த வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரன்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.