
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம். வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதுடன் தரமான சேவையையும் வழங்க வேண்டும்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பெரும்பான்மையான குற்றச்சாட்டு நெட்வொர்க் கட் ஆவது மற்றும் கால் தானாகவே மியூட் ஆவது போன்றது தான். எனவே இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக நிறுவனங்கள் தீர்வு காண வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற நபர்களிடமிருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை தடுப்பதற்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை டிராய் வழங்கியுள்ளது.