திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை அறிவித்தது போல் இன்று வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதிலளித்துள்ளார். அதில், திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலைக்கு கெடு விதித்துள்ளார்.

மேலும் யார் யார் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை கூறினாரோ அவர்கள் அனைவரும் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலைக்கு உண்மை சொல்லி பழக்கம் இல்லை. இனி அண்ணாமலையால் தமிழக முழுவதும் பாஜாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவே நேரம் சரியாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.