அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிறப்பு சரிபார்ப்பு’க்கு ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அறிவித்துள்ளது.

பிறந்த தேதி தொடர்பான அடையாள ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளது. இந்திய சிறப்பு ஆணையத்தின் (UDAI) உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக EPFO ​​சமீபத்தில் தெரிவித்துள்ளது. இனி, ஆதார் அட்டை முதன்மை அடையாள ஆவணமாக கருதப்படும்.