ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் “மக்களை நோக்கி விஜய்” என்ற பரப்புரை பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்திற்கு வந்த விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றிய விஜய், தனது அரசியல் நிலைப்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் அதிரடியாக முழங்கினார்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்கள் விஜய்க்கு ஒரு “வெள்ளி செங்கோலை” வழங்கி கௌரவித்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அந்தச் செங்கோலை விஜய் கையில் ஏந்திய தருணம், மைதானத்தையே அதிர வைத்தது.