விஜயமங்கலம் சரளை பகுதியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் “மக்களை நோக்கி விஜய்” பரப்புரை பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்திற்கு வந்த விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றிய விஜய், தனது அரசியல் நிலைப்பாடுகளை அதிரடியாக முழங்கினார்.
Thank you Erode 🙏🏻 pic.twitter.com/897ADrZtA4
— Vijay (@actorvijay) December 18, 2025
தனது உரையை முடித்த பிறகு, பிரசார வாகனத்தின் மேல்தளத்தில் நின்றபடியே அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் விஜய் ‘செல்பி வீடியோ’ எடுத்துக்கொண்டார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த செல்பி வீடியோவை “நன்றி ஈரோடு” என்ற வாசகத்துடன் விஜய் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
