பீகார் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் பீகார் வாரியம் இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது தாள் ஒன்று மற்றும் இரண்டு என நடத்தப்படுகிறது.இது குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட ஆசிரியர் தகுதி தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது என்று கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் 100 மதிப்பெண் பாடம் சார்ந்த கேள்வி கற்பித்தல் முறைகள் மற்றும் திறன்களுக்கு கூடுதலாக 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.