நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மட்டும் தான் தங்கள் கால் தடத்தை பதித்து வந்ததது. இந்த நிலையில் தற்போது இதில் நான்காவது நாடாக இந்தியா களமிறங்கியது. அதிலும் இதுவரை நிலவில் யாரும் அடையாத நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயன் மூன்று இறக்கி சாதனை படைத்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது .

மேலும் நிலவில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியிருப்பதற்கான சோதனையின் அடித்தளமாக சந்திராயன்-3 விளங்கும் என்றும் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வுகளை  மேற்கொள்ளும் பணியை சந்திராயன்-3 செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில்  இந்தியாவின் பெருமையை தடம்பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான தீர்மானமும் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.