நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிசெய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான், தற்போது ஹைட்ரஜனை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நிலவில் அலுமினியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், குரோமியம், டைட்டானியம், சிலிக்கான் ஆகியவை இருப்பதையும் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.