மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். இது 100 நாள் வேலை திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் (ABPS) கீழ்  வரும் ஆக.31ம் தேதிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்டாயம் ஊதியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவே கடைசி தேதி என கூறப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.