iBOMMA என்பது தெலுங்கு OTT உள்ளடக்கத்தை இலவசமாகக் காட்டும் ஒரு தளமாகும். இருப்பினும், இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து இலவசமாக திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்வது எப்பொழுதுமே  ஆபத்தானது என்று  சைபர் நிபுணர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தளத்தை திறக்கும் போது அதிக அளவில் விளம்பரங்கள் வருவதால் சைபர் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

மொபைல்களில் தெரியாமலேயே ஆபத்தான வைரஸ்களை நிறுவி விடுவதாக கூறப்படுகிறது. மூவி ரூல்ஸ் மற்றும் தமிழ் டோரண்ட்ஸ் ஆகியவையும் ஆபத்து என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.